Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 06 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஸன்
“போராடிக் கொண்டிருக்கும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளையும், வேலையற்ற பட்டதாரிகளையும் ஜனாதிபதி, யாழ். விஜயத்தில் சந்திக்காமை கண்டிக்கத்தக்கது. தன்னை பதவிக்குக் கொண்டுவந்த தமிழ் மக்களின் பிரச்சினையில் அவரது கரிசனை கேள்விக்குட்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் அச்சுறுத்தல்களையும் தாண்டி, வாக்களித்த சமூகங்களுக்கு, ஜனாதிபதி செய்யும் நன்றிக்கடன் இதுவா?” என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
காணாமற் போனோரின் உறவினர்கள் மற்றும் வேலையற்ற பட்தாரிகளை , கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி சந்திப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. எனினும், போராட்டக்காரர்களை ஜனாதிபதி சந்திக்கவில்லை.
இந்நிலையிலேயே, வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து விந்தன் கனகரத்தினம், மேலும் கூறுகையில், “ஆளுநர் அலுவலகத்தில், 'ஜனாதிபதியிடம் சொல்லுங்கள' என்ற அலுவலகம் திறக்கப்பட்ட போது, அங்கு தமது பிரச்சினைகளை சொல்லச் சென்ற மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
சர்வதேசத்துக்கு, தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுவதாகக் காட்டிக்கொண்டு, மக்களின் பிரச்சினையை தீர்க்காத அரசாங்கத்தின் இரட்டைவேடம் இதிலிருந்து தெரிகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த நெருக்கடியைத் தாண்டி, வாக்களித்தே தமிழ் மக்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவுசெய்தனர்.
தேர்தலில் அவரை எதிர்த்து மஹிந்தவின் பிரச்சாரப் பிரங்கிகளாக வலம் வந்தவர்கள், இன்று அவரின் ஆலோசகர்களாகவும் சகாக்களாகவும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருக்கின்றனர். ஆனால், அர்ப்பணிப்புடன், அவருக்காக வாக்களித்த தரப்புக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது, அதவர்கள் வீதியில் இருக்கின்றனர்.” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago