2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தந்தை செல்வாவின் ஜனன தினம்

Princiya Dixci   / 2022 மார்ச் 31 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

தந்தை செல்வாவின் 124ஆவது ஜனன தினம், வவுனியாவில் இன்று (31) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா, மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின்  திருவுருவ சிலையடியில், நகர சபை உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில்,   காலை 9 மணியளவில் ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, அன்னாரது நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்துடன், மலர் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

அதேவேளை, தந்தை செல்வநாயகம் தொடர்பான நினைவுபேருரையை நகர சபை உறுப்பினர் நா.சேனாதிராஜா நிகழ்த்தியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .