2025 ஜூலை 12, சனிக்கிழமை

தந்தை, மகன் சடலமாக மீட்பு

George   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், சௌத்பார் கிராமத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தந்தை, மகன் ஆகியோர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

ஜெஸ்மன் (வயது-49) மற்றும் அவரது இளைய மகனான ஜெ.ஜெக்ஸ்சன் (வயது9) என்ற சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று  இரவு 7 மணியளவில் மீன் பிடிப்பதற்காக “குள்ளா” என அழைக்கப்படும் படகில் இவர்கள் இருவரும் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இருவரும் இரவு வீடு திரும்பாத நிலையில், இன்று காலை கடற்கரை பகுதிக்குச் சென்று மூத்த மகன்  இன்று தேடிப்பார்த்துள்ளார்.

இதன்போது தனது தந்தை மற்றும் தம்பி இருவரும் மீன் பிடிக்கச் சென்ற படகு, கடலில் மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளான நிலையில், அயலவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள்  முறைப்பாடு செய்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு  வந்த மன்னார் பொலிஸார்,  கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்கள் இணைந்து கடலில் தேடியுள்ளனர்.

முதலில், சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட போதும், நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தந்தையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள், மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான, மேலதிக விசாரணையை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களுடனும், உறவினர்களுடனும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .