2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

’தன்னிச்சையாக செயல்படும் ஓர் அரசாங்கத்தின் ஆட்சி’

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்களுக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து நீதியை நிலைநாட்ட இலங்கை அரசு தவறியுள்ளது. இதனால், இலங்கை கத்தோலிக்க திருச்சபை, சர்வதேசத்தின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை  தெரிவித்துள்ளார்.

அத்துடன், இறுதிப் போரில் நடந்தேறிய போர்க் குற்றங்களுக்கு நீதியை நிலை நாட்டாமல் சர்வதேசத்தின் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, தன்னிச்சையாக செயல்படும் ஓர் அரசாங்கமே இன்று ஆட்சியில் உள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

தவக்காலத்தில் ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களும் தங்கள் மறைமாவட்ட மக்களுக்கு தவக்கால திரு மடலை எழுதியுள்ளனர்.

அந்தவகையில், மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு எழுதியுள்ள திருமடலிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தவக்கால திருமடலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆட்சியாளர்களின் அசமந்தப் போக்கினால் அனைத்து மக்களும் ஆழ்ந்த அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் உள்ளனர். 

“இலங்கை இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரத் தடை போன்றவை சாமானிய மக்களை மட்டுமல்ல; நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

“ஆகவே, பவுலடியாரின் கூற்றுப்படி, இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய் தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும் உயர் நிலையில் உள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X