Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
பெரும்பான்மைக் கட்சிகள் தங்கள் மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்தக்கூடாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இவ்வளவு காலமும் கிளிநொச்சியில் எத்தனை கிராமங்கள் இருகின்றன, கிராமங்களின் பெயர்களைக் கூட தெரியாத பெரும்பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு, கிராமம் கிராமமாக சென்று குழுக்களை அமைத்து வருகின்றனரெனவும் தெரிவித்தார்.
வாழ்வாதாரம் தரப் போகின்றோம், வேலைவாய்ப்பு தரப் போகின்றோம் என்று போலி வார்த்தைகளைக் கூறிக் கொண்டு எம் கிராமங்களில் உலாவருகின்றார்கள். தேர்தல்கள் நெருங்க உள்ள நிலையில் மட்டுமே அவர்களுக்கு எங்கள் மக்களின் கஷ்டங்கள் கவலைகள் தெரிகிறது எனவம் அவர் தெரிவித்தார்.
இவ்வளவு காலமும் ஏன் என்று கூட பார்க்காத இவர்கள், எம் மக்களுக்கு யாரென்றே தெரியாத பெரும்பான்மைக் கட்சியினர், எங்கள் தாயக பூமிக்குள் வந்து கூவித் திரிவதைப் பார்க்க ஏழனமாக உள்ளதெனத் தெரிவித்த அவர், உங்கள் ஏமாற்று வேலைகளை உங்கள் ஊர்களில் வைத்துக் கொள்ளுங்களெனவும் கூறினார்.
உங்கள் அற்ப சலுகைகளுக்காக எங்கள் இனத்தை அடகு வைக்கின்ற மக்கள் எங்கள் பகுதிகளில் இல்லையெனவும், அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
31 minute ago