2025 ஜூலை 12, சனிக்கிழமை

’ தமிழ்த் தேசியத்தினதும் இருப்புக்கு கலைகள் இன்றியமையாதது’

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

தமிழினத்தின் இருப்புக்கும் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கும் கலைகள் இன்றியமையாதது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று  (09) இடம்பெற்ற துணுக்காய் தமிழ்த்தாய் கலா மன்றத்தின் மண்வாசனை இறுவட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது இன விடுதலைப் போராட்டத்துக்கு கலைகளும் கலைஞர்களும் ஆற்றிய பங்கு மகத்தானது. போராட்டம் நடந்த காலங்களில் கலைஞர்கள் தங்களின் கலைத் திறனால் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதுடன் போராட்டத்துக்கு வலுச் சேர்த்தார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது கலைகள் முடிவுறவில்லை” எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலன் குணசீலன், வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் க.கமலேஸ்வரன், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .