2025 ஜூலை 12, சனிக்கிழமை

தமிழரின் வரலாற்றை அரசாங்கம் திட்டமிட்டு அழிக்கின்றது

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

“தமிழ் மக்களின் வரலாற்றை அழிக்கும் வகையில் வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக, மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசாங்கம்,  எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிக்கின்றது.

அத்துடன், யுத்தத்தின் வடுக்கள் வடபகுதி மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா  குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட இந்துமாமன்ற அங்குரார்ப்பண நிகழ்வு வியாழக்கிழமை காலை முல்லைத்தீவு  மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்  “சாந்தி சிறிஸ்கந்தராசா,  சோழர் காலத்தில் எவ்வாறு  தென் இந்தியாவில் அறநெறி வளர்க்கப்பட்டதோ அதேபோன்று வடக்கு, கிழக்கிலும் அறநெறி வளர்க்கப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இந்தநிகழ்வில், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேச செயலகபிரிவுகளை சேர்ந்த இந்துமாமன்ற உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .