2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

தற்போது வரை 89 குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிப்பு

Thipaan   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதன் காரணமாகவும் குளங்கள் நிரம்பி வான்பாய்வதாலும் 89 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வீதிகளை மூடி வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் சீர்குலைந்திருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் மழைவெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததன் காரணமாக பதினாறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒட்டுசுட்டானில் பண்டாவன்னியன் கிராமத்தில் மழைவெள்ளம் காரணமாக ஐம்பது குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாந்தை கிழக்கு ஒட்டறுத்தகுளத்தில் மூன்று குடும்பங்களும் துணுக்காயில் இரண்டு குடும்பங்களும் துணுக்காயின் பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான் கிராமங்களில் பதினைந்து குடும்பங்களும் துணுக்காயின் கல்விளானில் மூன்று குடும்பங்களும் தற்போது வரை மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் வான்பாய்வதால் போக்குவரத்துகள் சீர்குலைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X