Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட உடையார்க்கட்டு, குரவில் கிராமத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில், நேற்று (26), தீ மிதித்த இருவர், எரிகாயங்களுக்குள்ளான நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
குரவில் பகுதியைச் சேர்ந்த 31, 38 வயதுகளையுடய ஆண்கள் இருவரே, இவ்வாறு எரிகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
குரவில் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில், நேற்று (26), சித்திரா பௌர்ணமி விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்றது.
இதன் போது, குறித்த இருவரும் தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவுசெய்து கொண்டிருந்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளானர்.
இவ்வாறு எரிகாயங்களுக்குள்ளான இருவரும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago