2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

துரவுக்குள் விழுந்த யானைகள் மீட்பு

Princiya Dixci   / 2021 மே 03 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செம்மலையின் புளியமுனை கிராமத்தில், துரவு ஒன்றுக்குள் (பாசனத்துக்கு உதவிடும் பெருங்கிணறு) வீழ்ந்த யானைகள் இரண்டு, கிராம அலுவலர் மற்றும் கிராம மக்களின் கடும் முயற்சியால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

புளியமுனைப் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்ட  துரவு ஒன்றிலே இன்று (03) குறித்த யானைகள் விழுந்து சகதிக்குள் சிக்கியிருந்தன.

சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்க ப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு அவர்கள் வருகை தர தாமதமான நிலையில், கிராம அலுவலர் மற்றும் பொதுமக்கள் இணைந்து யானைகள் வெளியேறக்கூடிய வகையில் கிணற்றை வெட்டி விட்டு, யானைகளை பாதுகாப்பாக மீட்டு, வனப்பகுதிக்கு அனுப்பினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .