2025 மே 05, திங்கட்கிழமை

’தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு’

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி மாவட்டத்தில், நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 452 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரெனவும் அவர்களில் 400 பேர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென்றும் 52 பேர்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களென்றும் கூறினார்.

சனிக்கிழமை (22) 36 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த அவர், இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனரென்றும் எனவே, மக்கள் விழிப்புணர்வுடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

அத்துடன், இதுவரை, சுகாதார திணைக்களத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1,372 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், மாவட்டச் செயலாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X