2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

த.தே.ம.மு முக்கியஸ்தரிடம் விசாரணை

Niroshini   / 2021 மே 17 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
 
தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் பாராளுமன்ற வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ். தவபாலனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் எஸ். தவபாலன், பல்வேறு சமூக சேவைகள் மற்றும் தமிழர் நலன்சார் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் சேவையாற்றும் கிராமத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த விசாரணைகளில், அவரது குடும்ப உறுப்பினர்களது விவரம், வெளிநாட்டு தொடர்புகள், முள்ளிவாய்க்கால் நினைவுதின ஏற்பாடுகள், பல்கலைக்கழகத்தில் செயற்பட்ட விதம் உள்ளிட்வை தொடர்பில் இதன்போது விசாரிக்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .