2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தையல் வகுப்புக்குச் சென்ற யுவதியை காணவில்லை

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நெடுங்கேணி ஒலுமடுவைச்சேர்ந்த 17 வயது யுவதியை காணவில்லை என நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒலுமடுவைச்சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிரிசாந்தினி என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

தையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவுக்கு சென்று, பொருட்களை வாங்கி வருவதாகக் கூற கடந்த சனிக்கழமை சென்ற யுவதி, மீண்டும் வீடு வந்து சேரவில்லை என யுவதியின் தாயார் தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவுவரை யுவதி வீடு வந்து சேராமையினால் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .