2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தீயில் எரிந்து இரண்டு வர்த்தக நிலையங்கள் நாசம்

George   / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளன.

சனிக்கிழமை (18) இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளன.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, தீ பாரியளவில் பரவிச் செல்வது தடுக்கப்பட்டது. எனினும், உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையம் என்பன முற்றாக எரிந்துள்ளன.

தீ விபத்துக்கான காரணம்  தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .