Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 08 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேறி, தமது காணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து, மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம், நேற்று எட்டாவது நாளாகவும் தொடர்ந்தது.
கேப்பாபுலவு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சீனியா மோட்டை, சூரியபுரம், மற்றும் பிலவுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை, போராட்டத்தின் மூலம் மக்கள் பெற்றனர்.
இந்நிலையில், கேப்பாபுலவில் பூர்வீகமாக வாழ்ந்த 128 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு, வலியுறுத்தியே கடந்த முதலாம் திகதி போராட்டம் இடம்பெற்றது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச படையினரால் காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
7 hours ago
13 Jul 2025