Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நகரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் இந்தவேலைத்திட்டங்களுக்குத் துறைசார் அமைச்சர்கள் ஊடாகப் பெருமளவு நிதி எதிர்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
நகர அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் தட்டுவன்கொட்டி, ஊரியான், முரசுமோட்டை, கோரக்கன்கட்டு, பரந்தன், பன்னங்கண்டி மற்றும் மருதநகர் போன்ற இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
கிளிநொச்சியை அபிவிருத்தி செய்;வது தொடர்பான கூட்டம், கடந்த வருடம் மே மாதம் 7ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்;றது. திட்டமிடல் நகராகக் கிளிநொச்சியை உருவாக்;குவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
பரந்தன் உப நகரத்தை கைத்தொழில் மையமாகவும், கரடிப்போக்குச்சந்தியை சேவைகளின் மையமாகவும், கிளிநொச்சி நகரை கைத்தொழில் வணிக சேவை தொழில்துறைமையமாகவும், இரணைமடுச்சந்தியை சுற்றுலா மற்றும் கல்வி அபிவிருத்தி யைமாகவும், திருமுறிகண்டிப்பகுதியை பண்பாட்டு மையமாகவும் உருவாக்குவதற்கு அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கிளிநொச்சியின் அபிவிருத்தி இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களையும் தொழில்சார் வளங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படும் கிளிநொச்சியில் கட்டடங்கள் எழுப்புவது மட்டுமே அபிவிருத்தி அல்ல. நகரின் இயற்கைப் பல்வகைத்தன்மையைப் சமனிலைப்படுத்தி பசுமை மிக்கதோர் நகரமாக இதனைக்கட்டியெழுப்புவதே நோக்கம். கிளிநொச்சி டிப்போசந்தியை மையப்படுத்தி பரந்தன் கரடிப்போக்குச்சந்தி மற்றும் இரணைமடு வரையான பகுதிகள் இந்த திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும்.
இதன் முதற்கட்டமாக கிளிநொச்சி பிரதான பஸ் நிலையத்திதை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெறுமனே பஸ்கள் வந்து போகும் இடமாக மாத்திரம் அல்லாமல் பயணிகள் தங்கிக்;செல்லக்கூடிய வகைகளில் ஓய்வு விடுதிகள் மற்றும் குளியலறை வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.
அந்த வளாகத்தில் பசுமைத்தன்மை பேணப்பட்டு நவீன முறையில் கடைத்தொகுதிகளும் அமைக்கப்படும்.
அத்துடன் பொதுச்சந்தையை அண்மித்த பகுதியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக நவீன சந்தை கட்டத்தொகுதிகளும் அமைக்கப்படுவதுடன் பல்வேறு திட்டங்களும் முன்னெடுக்கப்;படும்.
கடந்த 20ஆம் திகதி கிளிநொச்சிக்கு வருகை தந்த நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
கிளிநொச்சி ஏ-9 வீதியை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்குள் அருகிலுள்ள கிராமங்களை உள்வாங்குவது தொடர்பாகவும் அப்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கிளிநொச்சி ஏ-9 வீதி ஆனையிறவில் இருந்து பழைய கண்டி வீதி வழியாகஇரணைமடுச்சந்தி வரைசென்று ஏ-9 வீதியுடன் இணைக்கும் வகையில் வெளிச்சுற்று வீதியொன்றை அமைப்பது தொடர்பிலும் அதிகாரிகள் ஆலோசித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
8 hours ago