Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
'நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின்' ஏற்பாட்டில் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் இடம்பெற்று வந்த கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை அச்சங்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
'நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின்' தலைவர் க.பவமொழி பவன் தலைமையில் இடம் பெற்ற குறித்த சான்றிதல் வழங்கும் நிகழ்வுக்கு, பிரதம விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள் ராஜ் குருஸ், சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவையாளர்களும், வர்த்தகர்களுமான என்.கனேசலிங்கம் (சொக்கன்), த.சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 39 மாணவ மாணவிகள், இளைஞர், யுவதிகளுக்கு சான்றுதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் கணினி கற்பித்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.
பின் தங்கிய கிராமங்களை அடையாளம் கண்டு, குறித்த கணினி பயிற்சிகள் போன்று ஏனைய தொழிற்பயிற்சிகளை வழங்கி இக்கிராம மக்களின் முன்னேற்றத்துக்கு அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக அச்சங்குளம் கிராமத்தில் இடம் பெற்ற கணினி பயிற்சி நெறியை சிறப்பான முறையில் நடத்திய நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் குழுவினருக்கும் அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கியவர்களுக்கும் தமது கிராமம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக சான்றிதல்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
38 minute ago
1 hours ago