2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நானாட்டான் பிரதேசத்துக்கு உள்ளக பஸ் சேவை

Editorial   / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

நானாட்டான் பிரதேச கிராமங்களை இணைக்கும் வகையில், உள்ளக பஸ் அல்லது சிற்றூர்ந்துச் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக,   நானாட்டான் பிரதேசச் செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர்,

நானாட்டான் பிரதேசத்துக்கான பொதுப் போக்குவரத்துச் சேவையாக, மன்னாரில் இருந்து வங்காலை, உயிலங்குளம், முருங்கன், மடுக்கரை மற்றும் அரிப்பு ஆகிய பிரதேச்ஙகளுக்கு வழமையான பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றனவெனவும் இவை பிரதான வழிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவெனவும் அவர் தெரிவித்தார்.

இதனால், நானாட்டானில் இருந்து நீண்ட தூரங்களைக் கொண்ட கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள், உள்ளூர் வியாபாரிகள், முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்ததுடன், இதனைக் கருத்தில் கொண்டு, நானாட்டான் பிரதேசக் கிராமங்களை இணைக்கும் உள்ளக பஸ் அல்லது சிற்றூர்ந்துச் சேவையை ஆரம்பிக்க  தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் தி.பரஞ்சோதி, உபதவிசாளர் புவனம் மற்றும் பொது அமைப்புகளுடன் கலந்துரையாடி, உள்ளக போக்குவரத்து வலையமைப்புக்காக  சில கிராமங்கள் பரிந்துரை செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், அந்தக் கிராமங்கள் வழியாக மன்னார் நகரை  இணைக்கும் படியான வழித்தடங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த உள்ளகப் போக்குவரத்து வழிக்கான அனுமதியை கோரி, உரிய தரப்பினருக்கு விண்ணப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X