Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் இடம்மாறாது, நிலையாக தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த இடங்களை கையகப்படுத்துவதென்பது, அவர்களுடைய வாழ்வியலைச் சிதைப்பதான, வரலாறுகளை அழிப்பதான, சுதந்திரத்தை முடக்குவதான செயற்பாடொன்றாகும் என வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில், 379 ஏக்கர் தனியார் காணிகள் உட்பட 617 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இவ்வறிவித்தல், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால், கடிதத்தின் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரவிகரன்,
“ஜனநாயக நாட்டிலே உரிமைகள் சமம் என்று கூறுகிறார்கள், அவ்வாறெனில் எமது மக்களுக்கான உரிமைகள் எங்கே, நந்திக்கடல் வடக்காறு பகுதியை ஒட்டியவாறு இக்காணிகள் அமைந்துள்ளது. எனவே இங்கு மீன்பிடி செய்து தமது அன்றாட வாழ்க்கையை நடாத்திக்கொண்டிருந்த மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.
மேலும் விவசாய நிலங்களும் இதற்குள் அதிகமாக உள்ளடங்குவதால், பல விவசாயிகளுடைய வாழ்வாதார கட்டமைப்புகளும் பாதிக்கப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. அது தவிர எமது மக்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலங்களை கையகப்படுத்துவதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கடற்படையினதும் அரசாங்கத்தினதும் இத்தகைய செயற்பாட்டை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago