2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நீர்வீழ்ச்சியில் மூழ்கியவர்களை தேடும் பணிகள் இடைநிறுத்தம்

Freelancer   / 2022 ஏப்ரல் 13 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவேளை, கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், இருவர் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரண்டாவது நாளாகவும் கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதும், ஒரு யுவதியின் சடலமே கண்டு பிடிக்கப்பட்டது. 

எனினும், இளைஞர் ஒருவரினதும், யுவதி ஒருவரினதும் சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

பெய்து வரும் மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று 13 மாலை தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை, நாளைய (14) தினம் யுவதியையும், இளைஞரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X