2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நுழைவாயில் சேதம்: 10 பேர் சரண்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் - மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருகேதீஸ்வர கோவிலின் அலங்கார நுழைவாயில் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள், சட்டத்தரணி ஊடாக இன்று (24)  காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

அருட்தந்தை ஒருவர் உட்பட 10 பேரே, இவ்வாறு இன்று காலை சட்டத்தரணி ஊடாக, மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இவர்களில் மூன்று பெண்களும் ஆறு ஆண்களும் அடங்குகின்றனர்.

குறித்த 10 பேரிடமும் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட மன்னார் பொலிஸார், அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ, அருட்தந்தையை சொந்தப் பிணையிலும், ஏனைய 9 பேரையும் 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் செல்ல அனுமதித்தார்.

அத்துடன், வழக்கு விசாரணை, இம்மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .