2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நேரத்தை மாற்றக் ​கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில், பால் கொள்வனவு செய்யும் நேரத்தை மாற்றுமாறு கோரி, கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று (26) காலை 7 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் கொள்வனவு செய்யும் நிறுவனம், காலை 7 மணிக்குப் பாலைக் கொள்வனவு செய்வதன் காரணமாக, கிராமத்தின் சகல இடங்களில் இருந்தும் பாலை குறித்த இடத்துக்குக் கொண்டு வருவதற்கு குறைந்தது காலை 8 மணியாவது இருக்க வேண்டும்.

குறித்த நிறுவனம் காலை 7 மணிக்கு பாலைக் கொள்வனவு செய்து கொண்டு செல்வதன் காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்கள் பாலினை முழுமையாக விற்க முடியாமல் இருப்பதாகவும் எனவே காலை 8 மணியளவில் பாலினைக் கொள்வனவு செய்யுமாறு, கிராமத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .