Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
George / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
நாற்று நடுகை மூலம் நெற்செய்கையை மேற்கொள்வதால் விவசாயிகள், கூடுதலான விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியுமென முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு துணுக்காய் கோட்டைக்கட்டியகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற வயல் விழாவில், நெற்பயிர்ச்செய்கையில் நாற்றுநடுகைக்கான நாற்றுமேடுகளை எவ்வாறு உருவாக்குதல் என விளக்கமளிக்கும்போதே அவர் இதனைத் கூறினார்.
நாற்றுநடுகை என்பது புதிய தொழில்நுட்பம் அல்ல. இரு சந்ததிக்கு முன் மேற்கொண்ட பயிர்ச்செய்கை முறைதான். மனிதவலுவினைப் பயன்படுத்தி நாற்றுநடுகை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தற்போது, மனிதவலுவுக்கான கூலி அதிகரித்திருப்பதன் காரணமாக இயந்திரவலு பயன்படுத்தப்படுகின்றது. கடந்த இருபோகத்தில் நாமும் இயந்திரமூலம் நாற்றுநடுகையினை அறிமுகப்படுத்திவருகின்றோம்.
நாற்றுநடுகையின் நன்மைகளாக நீர்ப்பாசனம், நோய்களைக் கட்டுப்படுத்தல், களைகட்டும் கருவியினைப் பயன்படுத்துதல் போன்ற பல நன்மைகள் உள்ளன. இதனால் கூடுதல் விளைச்சல் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணுக்காய் விவசாயப் போதனாசிரியர் பொ.நிசாந்தினி, கோட்டைக்கட்டியகுளம் கிராம அலுவலர் எஸ்.குலசிங்கம் உட்பட கிராம விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago