Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 11 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் உரிய காலப்பகுதிக்குள் கிடைப்பதில்லை என்று பச்சிலைப்பள்ளி தவிசாளர் கூறிய கருத்தை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் மறுத்துள்ளார்.
கிளிநொச்சியில், நேற்று (10) நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் வைத்து, இதற்கு மறுப்புத் தெரிவித்து, இது தொடர்பில் கருத்துரைத்த அவர், கடந்த 6ஆம் திகதியன்று, கிளிநொச்சி ஊடக மையத்தில் நடை;பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் சுரேன், 'அரசாங்கத்தால் வழங்கப்படும் தனிமைப்படுத்ப்பட்டவர்களுக்கான உதவிகள் உரிய காலப்பகுதியில் கிடைப்பதில்லை;. தனிமைப்படுத்தல் காலப்பகுதி நிறைவு பெற்றதன் பின்னரே, அவ்வுதவிகள் கிடைக்கின்றன' எனத் தெரிவித்திருந்தார் என்றார்.
அத்துடன், தமது பிரதேச சபையால், அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கான உதவிகளை வழங்கி வருவதாகவும், மாவட்ட செயலகத்தின் இழுபறி நிலையே இதற்கு காரணம் எனவும, தவிசாளர் குறிப்பிடடிருந்தார் எனவும், மாவட்டச் செயலாளர் கூறினார்.
இக்கூற்றினை முற்றாக மறுத்த மாவட்டச் செயலாளர், குறித்த உதவிகள், உரிய காலப்பகுதியில் அவர்களுக்கு கிடைக்கப்பெறுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் விவரம் திரட்டப்பட்டு வழங்கப்பட்டதன் பின்னர், உடனடியாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஆத்துடன், குறித்த விடயம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லையென்றும், அவ்வாறு முறைப்பாடு கிடைத்தால் அதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago