2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பணிப்பாளராக அன்னமலர் நியமனம்

Princiya Dixci   / 2021 மே 02 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 5ஆம் திகதி முதல் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய இவர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார்.

இதுவரை வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளராக கடமையாற்றிய முத்து இராதாகிருஸ்ணன், யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்கு  இடமாற்றம் பெற்றுச்செல்லும் நிலையிலேயே, திருமதி அன்னமலர் சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X