Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என்.நிபோஜன்
இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன்பொக்கனை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள, பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அகற்றித் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போரின் போது, போரில் ஈடுபட்டவர்களாலும் மக்களின் தற்பாதுகாப்புக்காகவும் ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள், இப்பகுதியில் அமைக்கப்பட்டன.
அவற்றில் பல, இன்றுவரை மூடப்படாமல் இருப்பதன் காரணமாக, குறித்த குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதுடன், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
அத்துடன், மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, விவசாய முயற்சிகளை முன்னெடுக்க முடியவில்லை என கிராம, பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் ஆகிய ஆகியவற்றில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
3 hours ago
7 hours ago