2025 ஜூலை 12, சனிக்கிழமை

பனிக்கன்குளம் விபத்தில் இருவர் காயம்

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

பனிக்கன்குளம் பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில்  காயமடைந்த இருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கிளிநொச்சி நோக்கி பயணித்த, இராணுவத்தினருக்கு உணவுப்பொருட்களை ஏற்றி சென்ர பாரவூர்தி, வேகக்கட்டுப்பட்டை இழந்து, வீதியோரம் நின்ற மரத்துடன் மோதி, வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

சாரதி, நடத்துநர் ஆகியோர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .