2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பனைமரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்

Princiya Dixci   / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராஜா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பனை மரங்கள், அநாவசியமான முறையில் அழிக்கப்பட்டு வருவதை தடுத்துநிறுத்த வேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி (பளை), பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிகளவான பனைமரங்கள் அழிக்கப்படுவதாக முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைக்கப்பெறுகின்றன.

வீட்டுத்திட்டத்துக்கான தேவை போன்ற மிக அவசியமான தேவைக்கு மட்டும் பனைமரங்களை பயன்படுத்தவேண்டும். அதனை விடுத்து வர்த்தக ரீதியான நோக்கத்துடன் பனைமரங்கள் அழிப்பதை தடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .