Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில், முறையாக பயிற்றுவிக்கப்படாத பணியாளர்கள் பணியாற்றுவதால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், மாவட்ட அரச அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்கிழமை (03) இடம்பெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு சிறுவர் இல்லங்களில் 567 சிறார்கள் உள்ளனர். இவர்கள் வறுமை காரணமாகவும் யுத்தம் மற்றும் இதர காரணங்களால் பெற்றோர்களை இழந்தவர்களாகவும் உள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் அங்கு பணியாற்றுகின்ற பணியாளர்கள் அனைவருக்கும் சிறுவர் பராமரிப்பு தொடர்பில் போதியளவு பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லை. இது அதிகளவுக்கு சிறுவர்கள் உடல் உள ரீதியாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் சூழலை தோற்றுவிக்கும்.
அத்துடன், சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் மோசமாக வழிநடத்தப்படுவதற்கும் ஏதுவாக அமையும் எனக்குறிப்பிட்ட சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் உதவுயுடன் சிறுவர் இல்லங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்குரிய பயிற்சிகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
49 minute ago