Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - பரந்தன் நகருக்கான பஸ் நிலையத்தை விரைவாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், மாகாண குறித்தொதுக்கப்படட நிதியின் கீழ், 5.5 மில்லியன் ரூபாய் செலவில், பரந்தன் பகுதிக்கான பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இதன் உள்ளக வீதியை அமைப்பதற்கு, சபை நிதியில் இருந்து இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உள்ளக வீதி அமைக்கும் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
பஸ் நிலையத்தின் இருக்கைகளை அமைப்பதற்கு, மேலும் ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த வேலைகள் பூர்த்தியானதும், மிக விரைவில் பஸ் நிலையத்தைத் திறந்து வைக்க நடவடிக்;கை எடுக்கப்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.
20 minute ago
35 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
53 minute ago
2 hours ago