Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி, பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி, கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுக்கு, காணிகள் விடுவிக்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டுள்ளதோடு, மக்களும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
2008 ஆம் ஆண்டுக்கு பின்னர், இன்று முதல் தடவையாக தங்களின் வீடுகளுக்குச் சென்று துப்புரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த பிரதேசங்களில் இருந்து படையினரும் படிப்படியாக வெளியேறிவருகின்றனர். குறித்த பகுதிகளில் படையினரால் அமைக்கப்பட்ட வேலிகள் அகற்றப்பட்டு அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்தநிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை, உத்தியோகபூர்வமாக படையினரால் மாவட்ட அரச அதிபரிடம் இந்தக் காணிகள் கையளிக்கப்படவுள்ளன.
அதனையடுத்து, பிரதேச செயலகம் ஊடாக உரிய மக்களிடம் காணிகள் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
42 minute ago
49 minute ago