Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2017 ஜனவரி 27 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, மாங்குளத்தில் பஸ் நிலையம் ஒன்றினை அமைக்குமாறு வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாங்குளத்தில் அமைக்கப்படும் பஸ் நிலையத்தின் ஊடாக முல்லைத்தீவு, துணுக்காய், வெள்ளாங்குளம், முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு பஸ் சேவைகளை ஈடுபடுத்த முடியும்.
மேற்படி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் போக்குவரத்து செய்வதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் மாங்குளத்தில் பஸ் நிலையம் அமைப்பதன் ஊடாக போக்குவரத்துகள் இலகுபடுத்தப்படும்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலே, போக்குவரத்து நெருக்கடிகள் மிகுந்த பகுதிகளாக மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகள் காணப்படுகின்றன. இப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள பஸ்கள் பணியில் ஈடுபடாததன் காரணமாக பாடசாலைக்கு மாணவர்கள் நடந்தே செல்கின்றனர்.
மேலும் பிற மாவட்டங்களில் இருந்து துணுக்காய், மாந்தை கிழக்குப் பகுதிக்கு, பணிக்கு வரும் உத்தியோகத்தர்கள் மாங்குளத்தில் நீண்ட நேரம் காத்திருந்தே பஸ்களில் பயணிக்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
இது தொடர்பாக 2010ஆம் ஆண்டில் இருந்து பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago