Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
வடக்கு – கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள், நீண்ட கால யுத்தத்துக்குப் பின்னர், ஏதோ ஒருவகையில், உளநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், அவர்களைச் சுகதேகியாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு, அரசாங்கம் ஆதரவளிக்கவில்லையெனவும், அவர் குற்றஞ்சாட்டினார்.
மன நலம் தொடர்பான நடை பவனி, இன்று (21) காலை மன்னாரில் நடைபெற்றது. இதன்போது, மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து நடை பவனியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உளநல ரீதியாகப் பாதிக்கப்பட்ட இந்த மக்களைச் சுகதேகியாக்குவதற்காக தாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு, அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லையெனக் குற்றஞ்சாட்டியதுடன், எனவே இவ்வாறான உளநலப் பிரச்சினையால் பாதிக்கப்படடவர்களை, சமுதாய நீரோட்டத்தில் இணைப்பது முக்கியமெனவும் அவர் தெரிவித்தார்.
உடல் நோயைக் கவனித்து வரும் மக்கள், தங்கள் உளம் சார்ந்தப் பிரச்சினைகளைக் கவனிப்பதில்லையெனத் தெரிவித்த அவர், இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
எனவே, பொதுமக்கள் உளவியல் சார்ந்த விடயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறித்த நடை பவனி ஒழுங்கமைக்கப்பட்டதென, அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் இருந்து இன்று (21) ஆரம்பமான இந்த நடை பவனியானது, ஞாயிற்றுக்கிழமை (26) வவுனியா புதிய பஸ் நிலையத்தைச் சென்றடையும் வகையில் ஒழுங்கமைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago