Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாகவே வணக்க சிலைகள் உடைக்கப்படும் சம்பங்கள் இடம்பெறுகின்றன” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்;,
“மன்னார் மாவட்டத்தில் சர்வமதங்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கத்தோலிக்கர்கள் மற்றும் இந்துக்களின் வணக்கச் சிலைகள் மாறி மாறி உடைக்கப்பட்டன.
குறித்த சம்பவங்கள் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயலாக காணப்படுகின்றது.
மேலும், இந்து மக்கள் உணர்வோடு அனுஸ்டிக்கும் சிவராத்திரி தினத்தில் மன்னாரில் பல்வேறு இடங்களில் ஆலய விக்கிரகங்களை உடைத்தும், களவாடிச் சென்றும் இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குறித்த சம்பவங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே குறித்த சம்பவங்கள் தொடராத வகையில் பொலிஸாரும், உரிய அதிகாரிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago