Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.என். நிபோஜன் / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று (25) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில்,
“புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, மற்றும் விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன.
பெரிய பரந்தன் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள். எனவே தமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதானது பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.
முக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னைவள தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
எனவே குறித்த மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அதற்கான அனுமதியை வழங்காது இருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மகஜரைப் பெற்றுக்கொண்ட கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன்,
இவ் விடயம் எதிர்வரும் மாவட்ட ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago