2025 மே 08, வியாழக்கிழமை

புதுக்குடியிருப்பில் கற்றல் வகுப்புகளை நடத்த தடை

Niroshini   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களை அழைத்து கற்றல் வகுப்புகளை நடத்துவதற்கு, சுகாதார வைத்திய அதிகாரி முற்றாக தடைசெய்துள்ளார்.

புதுக்குடியிருப்பு கோட்டத்தில் சில பாடசாலைகளில் மாணவர்களை அழைத்து கற்றல் வகுப்புகள் நடத்தப்படுவதாக, பெற்றோர்களால் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முறையிடப்பட்டது.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால், பாடசாலைகளில் கற்றல் வகுப்புகளை நடத்துவது, கொரோனா தொற்றை அதிகப்படுத்தலாமென, வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

எனவே, வகுப்புகளை உடன் நிறுத்தி வைக்குமாறும் இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறும், புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரிக்கு சுகாதார வைத்திய அதிகாரி எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X