2025 மே 05, திங்கட்கிழமை

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் தலைமறைவு?

Niroshini   / 2021 மே 20 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400க்கும் அதிகமான ஊழியர்கள், பிசிஆர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என  அறியமுடிகிறது.

இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இன்றுடன் (20) இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், மக்கள் தனிமைப்படுத்தல் விதியை சரியாக நடைமுறைப்படுத்த தவறிவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X