சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 மே 14 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (14) இடம்பெற்றது.
இணைத்தலைவர் சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் கந்;தையா சிவநேசன், வடமாகாண புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன்;, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் திணைக்களத்தலைவர்கள், எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தில் கடந்த கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டதுடன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக படையினர் வசமுள்ள காணி விடயம் மற்றும் வனவளத்திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இணைத்தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் கலந்து கொள்ளாத நிலையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
15 minute ago
35 minute ago
3 hours ago