Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
“புத்தாக்கம் மிக்க இளைஞர்களுக்கே, நகரசபை தலைவர் பதவி வழங்குவோம்” என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் இ. கௌதமனை ஆதரித்து இன்று (31) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“70 வயதை கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபை தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை. சிலர் அவ்வாறானவர்களுக்கே தலைவர் பதவி வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
“வவுனியா நகரமானது, புதிய சிந்தனையுடன் உருவாக்கம் பெற வேண்டும். இளைஞர்களே சிறந்த சிந்தனையாளர்களாகவும் புத்துருவாக்கம் மிக்கவர்களாகவும் உள்ள நிலையில், அவர்களின் கைகளில் நகர அபிவிருத்தியை ஒப்படைப்பதே சிறந்தது.
“மக்களின் கருத்தறிந்து செயற்படக்கூடியவர்களையே, நகரசபைக்கு அனுப்ப வேண்டும். வெறுமனே அமைப்புகளில் இருந்தார்கள் என்ற செல்வாக்கால் நகரசபைக்கு உறுப்பினர்களை அனுப்பி விட்டு மக்கள் அவர்களை தேடித்திரிய முடியாது.
“எனவே, மக்கள் இலகுவாகச் சென்று தமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக்கூறக்கூடிய, அதனை செவிமடுக்கக் கூடிய ஆணவம் அற்றவர்களையே, வாக்களார்கள் தேட வேண்டும். அவ்வாறானவர்கள், உதயசூரியன் சின்னத்தில் மாத்திரமே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் உள்ளார்கள்” என்றார்.
37 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
38 minute ago
48 minute ago
1 hours ago