2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பூவரசன்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

க. அகரன்   / 2017 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்  

தமக்கு வரட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள், கிராம அலுவலரின் அலுவலகத்துக்குக் கேட்க சென்ற போது, அவர்களை அநாகரிகமாக பேசி கிராம அலுவலர் விரட்டியமையால், அம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இச்சம்பவம், இன்று (23) காலை இடம்பெற்றது. 

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 600இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வெறும் 100க்கும் குறைவான குடும்பங்களுக்கே வரட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளது. அதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்களை, நிவாரண வேலைக்காக கிராம அலுவலர் அழைத்திருந்தார். 

இந்நிலையில், வரட்சி நிவாரணத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தம்மை ஏன் புறக்கணித்ததாகவும், தாமும் அப்பகுதியில் தானே வசிக்கின்றோம் எனவும், தமக்கும் வரட்சி தானே என கிராம அலுவலரின் அலுவலகத்துக்குச் சென்று கேள்வி எழுப்பினர்.  

இதையடுத்து, அப்பகுதி கிராம அலுவலர் கி.கஜந்தன், “அம்மக்களை பார்த்து தாம் பெயர் விவரங்களை பதிவு செய்யும் போது எங்கு இருந்தீர்கள். வீட்டில் படுத்தா இருந்தீர்கள். எங்கேயாவது படுத்திட்டு இங்கு வந்து கேள்வி கேட்டக்கக் கூடாது” என, வயது வேறுபாடின்றி பலரையும் மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.  

இதையடுத்து, மக்கள் மத்தியில் குழப்பம்  ஏற்பட்டமையால், கிராம அலுவலகர் பூவரசன்குளம் பொலிஸாரை அழைத்து மக்களை தனது அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கிராம அலுவலர் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .