Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணிப் பிரதேசத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வரும் மக்களில் 49 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் உழைப்பாளர்களின்றிய குடும்பங்கள், தொழில் வாய்ப்புக்கள் ஏதுமின்றி உணவிற்கே பெரும் நெருக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கருநாட்டுக்கேணி பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள், கடந்த 1984ஆம்ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்ட நிலையில் யுத்தம் நிறைவடைந்து கடந்த 2011ஆம் ஆண்டு மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது 225 வரையான குடும்பங்கள் இப்பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள நிலையில், இவர்களில் பெருமளவான குடும்பங்கள் யுத்தத்தினால் தமது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் வாழ்ந்து வரும் மேற்படி குடும்பங்கள் பல இன்னும் அன்றாட உணவிற்கே சிரமப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் வாழ்வாதாரத்தொழிலான விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமையானது, கடற்தொழில் செய்யமுடியாத அளவிற்கு சட்டவிரோத தொழில்கள் மேற்கொள்ளப்படுதல் இவர்களின் எதிர்காலத்தை இன்னமும் கேள்விக்குறியாக்கியுள்ளதென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாழ்ந்து வரும் 225 குடும்பங்களில் ஒரு அங்கத்தர்;வர்களை கொண்ட 41 குடும்பங்களும் இரண்டு அங்கத்தவர்;;;களும் 49 வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்களும் காணப்படுகின்றன.
இதில் அதிகளவானோர் பொருளாதாரத்தில் நலியுற்றவர்களாக காணப்;படுவதுடன் ஒரு நேர உணவிற்கே அன்றாடம் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான குடும்பங்;களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய திட்டங்;களை நடைமுறைப்படுத்தி இவ்வாறான குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்;கை எடுக்குமாறு இப்பகுதி கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 minute ago
9 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
11 minute ago
1 hours ago