2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

‘போராட்டத்துக்கு அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது’

சண்முகம் தவசீலன்   / 2017 ஒக்டோபர் 24 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது போராட்டத்துக்கு அரசியல்வாதிகள் உரிமை கோருவதை நிறுத்துமாறு, எட்டு மாதங்களாகப் போராட்டத்திலீடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதி மக்களுடன் அரசியல் யாப்பு தொடர்பில், கடந்த சனிக்கிழமை (22) கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கேப்பாப்புலவு போராட்டம் தமது கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணால் தொடக்கி வைக்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாக 200 நாட்களுக்கு மேலாக அவர் அங்கு போராடி வருவதாகவும் அதற்கு தாம் தொடர்ந்து தம்மாலான அனைத்து உதவிகளையும் தொடர்ச்சியாக புரிந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், குறித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள், இது மக்கள் போராட்டம் என்றும் குறித்த பெண் சுமார் 100 நாட்களாக போராட்ட களத்தில் இல்லை எனவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தனர். 

மேலும், “எமது போராட்டத்துக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை மனிதாபிமான அமைப்புகளும் கட்சிகளும் அளித்து வருகின்றமை உண்மையே. நாம் எமது நிலத்துக்கான மீட்புப் போராட்டத்தை ஆரம்பித்த பின்புதான் அரசியல் கட்சிகள் எம்மை நோக்கி வரத் தொடங்கினர்.

அதன்பிறகு தான் அவர்கள் எமக்கு உதவினர். எமது போராட்டத்தை எந்தக் கட்சியும் கட்சி சார்ந்த நபரும் தலைமை தாங்கவில்லை. இது ஒரு மக்கள் போராட்டம். இதை அரசியல் இலாபத்துக்காக எந்தக் கட்சியும் பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .