2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைக் கொட்டகை தீக்கிரை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 27 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில், இன்றுத் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால், நான்கு வகுப்பறைகளைக் கொண்ட, கிடுகினால் வேயப்பட்ட தற்காலிகக் கொட்டகை, முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

பிரதேச மக்கள், பொலிஸார் மற்றும் பிரதேச சபையினர் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும், மின்னிணைப்புகள் அற்ற வகுப்பறைத் தொகுதி எவ்வாறு தீப்பற்றியது என, இதுவரையில் கண்டறியப்படவில்லை.

எவ்வாறாயினும், கிளிநொச்சியில் ஒரு தீயணைக்கும் கருவி இல்லாமையினாலே, கிளிநொச்சியில் தீ விபத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியாதுள்ளது என, கல்வியியலாளர்கள் கவலை வெளியிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .