2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை செல்லாத 8 சிறுவர்கள் தொடர்பில் நடவடிக்கை

Menaka Mookandi   / 2017 ஜனவரி 27 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பகுதியில் பாடசாலைக்குச் செல்லாத 8 சிறுவர்கள் மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள், மாவடடச் செயலகம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கையின் மூலமாக நேற்று (26) பிடிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ..ஆனந்தராசா முன்னிலையில் நேற்று மாலை (26) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, ஒரு சிறுவனை சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையிலும் மிகுதி 7 பேரின் பெற்றோர்கள் கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், குறித்த சிறுவர்கள் பாடசாலை செல்வதனை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென, கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில், அப்பிரதேச கிராம அலுவலர், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கண்காணிக்கவேண்டும் எனவும் நீதவான் இதன்போது பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .