2025 ஜூலை 03, வியாழக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 பேர் அதிரடியாக கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 18 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த போதும், அந்த வழக்குகளுக்கு சமுகமளிக்காமல் இருந்த 18 நபர்களுக்கும் எதிராக கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் நேற்று திங்கட்கிழமை (13) திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார், அனைவரையும் இன்று கைது செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .