2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு தீ

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் குடும்ப உறுப்பினர்கள், அருகிலுள்ள அவர்களின் உறவினர் வீட்டுக்குச் சென்று இரவுநேரத்தில் தங்குவது வழமை. சம்பவ தினமான, திங்கட்கிழமை இரவும், உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, இவர்களின் வீட்டுக்கு, இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளனர்.

இதனால் வீடு, தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம், குறித்த பெண் தலைமை குடும்பம் முறையிட்டதையடுத்து, அந்த அழிவை, நேரில் சென்று அவர் பார்வையிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு, வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்ததையடுத்தே, மேற்குறிப்பிட்ட முறைப்பாட்டை, குடும்ப உறுப்பினர்கள் பதிவுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .