2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதுக்குடியிருப்பு பகுதியளவில் விடுவிப்பு

Princiya Dixci   / 2017 மார்ச் 04 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அம்மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் வடுவிக்குமாறு, அக் காணியின் உரிமையாளர்களினால், கடந்த 2ஆம் திகதி தொடர்ச்சியான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
 
ஏந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படாமல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், கடந்த 14ஆம் திகதி முதல் 48 மணித்தியாலங்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
 
இந்நிலையில், இன்று சனிக்கிழமை (04) காலை, இம்மக்களுடைய 7.5 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ள இராணுவம், மிகுதிக் காணிகளை 3 மாத காலத்திலும் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த காணியை 6 மாத காலத்திலும் விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .