2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பற்ற ரயில் கடவை தொடர்பில் முறைப்பாடு

George   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி நகரத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால், பாடசாலை மாணவர்கள் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாக பெற்றோரால், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கந்தசாமி முருகவேலிடம் கேட்டபோது, பாதுகாப்பற்ற ரயில் கடவை தொடர்பாக பெற்றோர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில், ரயில்  திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்து உள்ளேன். சில ரயில் கடவைகள் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டிருந்தாலும் பல கடவைகள் பாதுகாப்பற்றனவாகவே உள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .