2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டியவர்கள் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.கண்ணன்

வவுனியா, ஈரப்பெரியகுளம், உளுக்குளம், அலியாப்பிட்டி சந்திப் பகுதியில், புதையல் தோண்டிய 4 சந்தேகநபர்களை, தடயப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 1  மணியளவில், இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரப்பெரியகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, புதையல் தோண்டிக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து நவீன ரக கார் ஒன்றும், புதையல் கண்டுபிடிக்கும் ஸ்கேனர் சாதனம் மற்றும் நவீன இலத்திரனியல் உபகரணங்கள் சிலவும், இதன்போது கைப்பற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .