2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புதிய நிர்வாக சபை தெரிவு

Niroshini   / 2016 ஜூன் 14 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி ஊடக அமையத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும்  புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது,  ஒன்பது பேர் கொண்ட  புதிய நிர்வாக உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி  ஊடக அமையத்தின் புதிய நிர்வாகத்தின் தலைவராக க.திருலோகமூர்த்தியும் செயலாளராக மு.தமிழ்ச்செல்வனும் பொருளாராக சி. சிவேந்திரனும்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, உப தலைவராக மனோகரவதனியும் உபசெயலாளராக க.இரவீந்திரராசாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, நிர்வாக உறுப்பினர்களாக ஜீவநாயகம், ரகுபதி ரஞ்சன், துசாந் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த வருடாந்த பொதுக்கூட்டத்திலும் புதிய நிர்வாகத் தெரிவிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த 22 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .